×

லைசென்ஸ் சர்வேயர் பயன்படுத்தும் நடைமுறையை முற்றிலும் கைவிடுங்கள்

திண்டுக்கல், நவ. 8: நில அளவையில் லைசென்ஸ் சர்வேயர் பயன்படுத்தும்நடைமுறையை முற்றிலும் கைவிட கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்.ஒ.ஏ. சங்க மாவட்ட செயலாளர் சுதந்தி, முன்னாள் மாநில துணை தலைவர் மகேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் நில அளவை கூடுதல் இயக்குனர் பணி, கடமை, அதிகார வரம்பு, தனித்தன்மையை மாற்றம் செய்யும் நிலஅளவை இயக்குனர் அரசுக்கு அனுப்பிய முன்மொழிவை கைவிட வேண்டும், நில அளவை களப்பணியில் லைசன்ஸ் சர்வேயர் பயன்படுத்தும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும், துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட கோரியும், கிராம ஆவணங்களின் 8ஏ மாறுதல் மேற்கொள்வதை கைவிட வேண்டம், உட்பிரிவு செய்ய இயலாத இனங்களின் கூட்டுபட்டா சேர்க்கை ஏதுவாக செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நில அளவையர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருவட்டார் பகுதியில்...