×

திறந்தவெளி கழிப்பறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

கீழ்வேளூர், நவ.8: நாகை மாவட்டம் கொளப்பாடு அரசு பள்ளி மாணவர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.நாகை மாவட்ட தேசிய பசுமைப் படை மற்றும் கௌப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளி இணைந்து கௌப்பாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் தூய்மை இந்திய பிரசாரம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகுமாரி தலைமை வகித்தார். விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ஆனந்தன் தொடஙகி வைத்து திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் தீமை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகாதார பணியில் ஈடுப்பட்டு வரும் பெண் ஊழியர்களுக்கு அலுமினிய கூடை மற்றும் துடப்பங்கள் பசுமை படை சார்பில் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.Tags :
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம்