கரூர் வாங்கல் அருகே கரூர் வாங்கல் அருகே

கரூர், நவ. 8: கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல் கடைவீதி வழியாக மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி தலா அரை யூனிட் மணலுடன் இரண்டு மாட்டு வண்டிகள் வருவதாக வாங்கல் போலீசாருக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு மாட்டு வண்டிகளை தலா அரை யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த வாங்கல் பகுதியை சோந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Karur Wangal ,
× RELATED குகைவழிப்பாதை சேறும், சகதியுமானதால் வாகனஓட்டிகள் அவதி