×

கரூர் பகுதியில் விபத்து ஏற்படும் வகையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்

கரூர், நவ. 8: அதிக பாரம் ஏற்றி விபத்து ஏற்படும் வகையில் வேன்கள் செல்கின்றன.கரூர் பகுதியில் சரக்கு வேன்களில் அதிக அளவில் பாரம் ஏற்றி செலகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் பாரம் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பின்னால் வரும் வாகனங்கள் முந்திசெல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. சாலையின் வளைவுகளில் எதிர்த் திசையில் வாகனங்கள் வருவது தெரியாமல் ஓட்டுனர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.மேலும் சரக்கு வேன்கள் பாரம் இறக்கிவிட்டு வரும்போது அதிக வேகத்தில் வருகின்றன. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்