×

கரூர் அருகே கணவனுடன் தகராறு 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கரூர், நவ. 8: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரன்(38). இவர் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், கடந்த மாதம் 31ம் தேதி அன்று குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி நதியா, மகள் ப்ரீத்தி(12), மகன் சுசீந்திரன்(14) ஆகிய மூவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Tags : Karur ,
× RELATED பெண்ணிடம் வழிப்பறி