×

கரூர் 80 அடி சாலையில் சாக்கடையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

கரூர், நவ. 8: கரூர் 80அடி சாலை மிகப்பெரியசாலை. இந்த சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்ஙகள், வங்கிகள் உள்ளன. வணிக பகுதியான இங்கு குப்பைகள் அதிக அளவில் சேருகின்றன. பலர் குப்பைகளை பாலித்தீன் பைகளில் சுருட்டி சாக்கடையில் வீசி விடுகின்றனர்.இதனால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அடைபடுகிறது. இப்பகுதி முழுவதும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சாலைக்கு வந்து விடுகிறது.இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் குப்பை அடைப்பினால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. கடும் துர்நாற்றத்தையும் சந்திக்க நேரிடுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சாக்கடையில் குப்பை போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,
× RELATED ராஜ்கோட். மைசூரு, இந்தூர், நவி மும்பை,...