கரூர் பழைய பைபாஸ் அணுகு சாலையில் முட்டி மோதும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

கரூர், நவ. 8: கரூர் பழைய பைபாஸ் அணுகு சாலையில் நெரிசலை போக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் பழைய பைபாஸ் சாலையில் இருந்து ஆண்டாங்கோயில் செல்லும் சாலையில் அணுகு சாலைகள் சந்திக்கின்றன. ஆண்டாங்கோயிலில் இருந்து இருசாலையும் பழைய பைபாஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் முட்டிமோதிக்கொள்கின்றன.இந்த இடத்தில் உள்ள வணிக வளாகங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் ஏரியா கிடையாது. இதனால் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர்.ஏற்கனவே செல்லும் வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கு இடம் இன்றி சிரமப்படுகின்றன. அடிக்கடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். மேலும் இந்த சாலை சந்திப்பில் சிக்னல் இருந்தும் செயல்படாமல் இருக்கிறது.ஆக்கிரமிப்பு அகற்றி சிக்னலை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Karur ,
× RELATED பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா...