×

கரூர் ராமானூர் கடைவீதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவலம்

கரூர், நவ. 8: ராமானூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது,
கரூர் நகராட்சி ராமானூர் கடைவீதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் நீர்கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், கடந்த சிலநாட்களாகவே குடிநீர் கசிந்து சாலையில் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.இந்த நீர் வடிகாலில் போய் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிநீர் வீணாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குடிநீர் சிக்கனம் பற்றி ஒருபுறம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இதுபோன்று ஏதாவது ஒருபகுதியில் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இதுபோல உடைப்பு மற்றும் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும் அதுபற்றி அறிந்து உடனடியாகக சரிசெய்யும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட வேண்டும்.குடிநீர் வீணாவதை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Tags :
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்