×

வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில்

கரூர், நவ. 8: வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஊரில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இருக்கும் குப்பைத் தொட்டிகளும் நிறைந்து வழிகின்றன. ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்துவதில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகரமாகும் குப்பைகளை தீவைத்து எரித்து விடுகின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காற்றை சுவாசிக்க முடியாத நிலைமை உள்ளது. உடனடியாக உள்ளாட்சி அதிகாரிகள் தலையிட்டு குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED குடும்ப வன்முறை... கொலை.... விபத்து... நாட்டை நரகமாக்கிய ‘பாட்டில் சொர்க்கம்’