அவிநாசியில் ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் திடீர் ஆய்வு

அவிநாசி நவ.8:  அவிநாசி ஒன்றிய பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நடைபெற்று வருகின்ற பணிகளை  ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் சுஜாதாசர்மா நேற்று அவிநாசி வட்டாரத்தில் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவிநாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சி பகுதியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடந்து வருகின்ற கான்கிரீட் தடுப்பணை பணிகளை  ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் சுஜாதாசர்மா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராமத்தில் விதைப்பந்து தயாரித்து விதைத்தல், வலையபாளையம் குளத்தில் நடப்பட்ட நாவல் மரங்களையும், குளங்களை சுற்றி அகழி அமைத்தல் பணிகளையும் பார்வையிட்டார்.

இது தொடர்பாக விவசாயிகளிடம், ஜல்சக்தி அபியான் திட்ட பொருளாதார ஆலோசகர் சுஜாதாசர்மா  கூறுகையில், கான்கிரீட் தடுப்பணை அமைக்கப்பட்டதால், வலையபாளையம் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு குட்டைகள் நிறைந்து உள்ளது. விவசாயிகளின் பணிகள் பாராட்டுக்குரியதாகும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்வரத்து அதிகரித்து விவசயத்துக்கு உபயோகமாக உள்ளது என்றார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் வெள்ளியங்கிரி, வட்டார பொறியாளர் கோகுல், உதவி பொறியாளர் கணேசன், பணிப்பார்வையாளர்கள் கோபாலகிருஷ்ணன், சித்ரா மற்றும்  ஊராட்சி செயலர் ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர். அவிநாசி தாசில்தார் சாந்தி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிஹரன், சாந்திலட்சுமி (கிராம ஊராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Avinashi ,Jalsakti Abhiyan Project Economic Advisor ,
× RELATED பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார மந்தநிலை: ஆய்வில் தகவல்