×

ஊட்டியில் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை

ஊட்டி, நவ. 8:  இரண்டாம் சீசன் முடிந்த நிலையில், ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்  எண்ணிக்கை குறையவில்லை.
ஆண்டு தோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. அந்நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்களை காட்டிலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே அதிகம் வருவார்கள். சில சமயங்களில் இவர்கள் டிசம்பர் மாதம் வரையிலும் வருவது வழக்கம். பொதுவாக பெரிய குழுக்களாக வருவார்கள்.

மேலும், சிலர் தங்களது மூதாதையர்கள் இங்கு வாழ்ந்த நிலையில், அவர்களின் வாழ்ந்த இடங்கள் மற்றும் கல்லறைகளை காண வருவதும் வழக்கம். இந்நிலையில் தற்போது இரண்டாம் சீசன் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்த போதிலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது. பெரும்பாலானவர்கள் ஊட்டி மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளில் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். தாவரவியல் பூங்காவிற்கும் நாள் தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடவும், அதே சமயம் எங்கிருந்து வருகிறார்கள்? என்பதை அறிந்துக் கொள்ளும் வகையில் அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Tags : arrival ,season ,Ooty ,
× RELATED கொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள்...