×

குந்தா ரோட்டரி சங்க ஆண்டு விழா

மஞ்சூர், நவ. 8: குந்தா ரோட்டரி சங்க ஆண்டு விழாவில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.    குந்தா ரோட்டரி சங்கத்தின் ஆண்டு விழா மஞ்சூரில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திநல்லசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், உதவி ஆளுனர் டாக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக ரோட்டரி ஆளுனர் அருள்ஜோதி கார்த்திகேயன் கலந்து கொண்டார். செயலாளர் அசோக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியவர்களுக்கு போர்வைகள் மற்றும் மருத்துவ உதவித்தொகைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் சிறந்த கல்வி சேவைக்காக மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, மேல்முகாம் மின்வாரிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மின் வாரிய முகாம் பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வழங்கப்பட்டது. முன்னதாக எடக்காடு அரசு மேல் நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. விழாவில் கேப்டன் ராமச்சந்திரன், பெள்ளி, விவேக் ஆனந்த், போஜன், கண்ணப்பன், முரளிதரன் மற்றும் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி் ஈரோடு, திருப்பூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்