×

கேரட், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி பயிர்களுக்கும் காப்பீட்டு திட்டம்

ஊட்டி.  நவ. 8: கேரட், முட்டைகோஸ், பூண்டு மற்றும் இஞ்சி பயிர்களை பாதுகாக்க  உத்தரவு பெறப்பட்டு பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு  வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெற அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  கூறியதாவது, ‘‘மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் காய்கறி  பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற  பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும்  அதிகள அளவில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இந்த பயிர்களுக்கு அதிகள  முதலீடு தேவைப்படுவதால் எதிர்பாரதவிதமாக ஏற்படும் மகசூல் பாதிப்புகளால்  விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மகசூல் இழப்பீட்டிலிருந்து  விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்   செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுவரை உருளைக்கிழங்கு, மரவள்ளி மற்றும்  வாழை பயிர்களுக்கு மட்டும் பயிர் காப்பீட்டு செய்யப்பட்டு வந்த நிலையில்  மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையின் முயற்சியால் இந்த ஆண்டு  கேரட், முட்டைகோஸ், பூண்டு மற்றும் இஞ்சி பயிர்களுக்கும் பயிர்  பாதுகாப்பீடு செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதற்கான பயிர்  காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு  காரிப்பருவத்தில் 2333 விவசாயிகள் 936 ஹெக்டர் பரப்பில் பயிர் காப்பீடு  செய்துள்ளனர்.

அண்மையில் ஊட்டி வட்டாரம் பாலாடா பகுதியில் ஏற்பட்ட  வெள்ள பாதிப்பினால் பாதிப்படைந்த விவசாயிகள், வெள்ளி பாதிப்பு ஏற்பட்ட நாள்  வரை பயிர் காப்பீடு செய்துள்ள 16 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 76  ஆயிரத்து 319 காப்பீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள  விவசாயிகளுக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் மூலம் பெறப்படும் மகசூலை  கணக்கில் கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற  எதிர்பாரதவிதமான இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகள் தங்களுக்கு  ஏற்படும் பொருளாதார இழப்பை பாதுகாத்துக்கொள்ள பிரதம மந்திரியின் பயிர்  காப்பீடுத் திட்டம் உதவியாக உள்ளது.

மேலும், வெள்ள பாதிப்பினால்,  பாதிக்கப்பட்ட 1362 விவசாயிகளுக்கு மாநில பேரிடம் மேலாண்மை நிவாரண நிதியில்  இருந்து காய்கறி பயிர்களுக்கு ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.13 ஆயிரத்து 500  வீதம் மொத்தம் ரூ.58 லட்சம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  எனவே, நீலகிரி மக்கள் அனைவரும் எதிர்பாராதவிதமாக  நிகழும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின்  கீழ் அரசாணை ராபி பருவத்திற்கு வரும் பட்சத்தில் உருளைக்கிழங்கு, கேரட்,  முட்டைகோஸ், பீ்ட்ரூட், பூண்டு, இஞ்சி, வாழை ஆகிய பயிர்களுக்கு பிரதம  மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும்.  இவ்வாறு இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Tags :
× RELATED திருமழிசை மார்க்கெட்டில்...