×

குடியரசு தினவிழா தடகள போட்டி

ஈரோடு, நவ. 8: பள்ளி கல்வித்துறை சார்பில் ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தினவிழா தடகள விளையாட்டு போட்டி வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில், கோபி கல்வி மாவட்ட அலுவலர் சிவக்குமார், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமன், பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று துவங்கிய போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவுகளில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டி நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 9ம்தேதி மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என விளையாட்டுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Republic Day Athletic Competition ,
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது