அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றி மூங்கில் குச்சியால் தடுப்பு அமைப்பு

மொடக்குறிச்சி, நவ.8: மொடக்குறிச்சி கருமண்டாம்பாளையத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றி மூங்கில் குச்சியால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கொடுமுடி ஒன்றியம் கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கருமாண்டாம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். இந் நிலையில், அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதானதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் ஒருபகுதி இடத்தை ஒதுக்கி பழுதான கட்டிடத்தில் இருந்த குழந்தைகளை இங்கு தங்க வைக்கப்பட்டு படித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த இந்த அங்கன்வாடி மையத்தில் தற்போது 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். இந் நிலையில், பழுதடைந்த அங்கன்வாடி மையம் ஊரின் மையப்பகுதியில் உள்ளது. இப் பகுதி அருகே குழந்தைகள் தினமும் விளையாடி வருகின்றனர். அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் விபத்து நடப்பதற்கு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து 3ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி படத்துடன் வெளியானது. இைதத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் மூங்கில் குச்சியால் தடுப்பு வேலி அமைத்துள்ளது. ஆனால், கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,`கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பலமுறை அரசுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை கட்டிடத்தை இடித்து அகற்றவில்லை. அருகிலேயே பள்ளி செயல்பட்டு வருவதால் அங்குள்ள குழந்தைகள் இந்த காலி இடத்தில் தான் விளையாடி வருகின்றனர். எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்’ என்றனர்.

Related Stories: