×

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்பு

கோவை, நவ. 8:கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் கல்லூரியின் செயல்பாடுகள் தொடர்பாக  1,500 மாணவர்களிடம் நாக் அமைப்பினர் கருத்து கேட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல், கற்பித்தலின் தரம் உள்ளிட்டவற்றை குறித்து நாக் அமைப்பு ஆய்வு செய்து புள்ளிகள் அடைப்படையில் தரச்சான்றுகளை வழங்கி வருகிறது. இதில், 3.51 முதல் 4 புள்ளிகளை பெறும் கல்லூரிகளுக்கு ஏ++ கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகளுக்கு ‘ஏ’ பிளஸ் கிரேடு எனவும் 3.01 முதல் 3.25 புள்ளிகளை பெறும் கல்லூரிக்கு ஏ கிரேடு என வழங்கி வருகிறது. இதில், 1.5 முதல் 2 புள்ளிகளை பெறும் கல்லூரிகளுக்கு சி கிரேடு வழங்கப்படும். ஆய்வில் திருப்தியில்லை என்றால் ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி மீண்டும் ஆய்வு நடத்த அறிவுறுத்தலாம். கோவை அரசு கலைக்கல்லூரி ‘ஏ’ பிளஸ் கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நிலை நிறுத்தி கொள்ளவும், கூடுதல் புள்ளிகள் பெறவும் கல்லூரி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாக் அமைப்பினர் கல்லூரியின் கற்றல், கற்பித்தல் குறித்து கல்லூரியில் உள்ள 1,500 மாணவர்களிடம் கருத்து கேட்டுள்ளனர். இதில், 10 சதவீதம் பேர் கருத்துகளை தெரிவித்தால் 50 மதிப்பெண்களை பெற முடியும். இந்த கருத்துகள் தெரிவிக்க வரும் 11ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விகள் மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நாக் கமிட்டி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது வரை 9 சதவீதம் மாணவர்கள் இ-மெயிலுக்கு பதில் அளித்துள்ளனர். மேலும், அடுத்த மாதம் நாக் கமிட்டி கல்லூரியை ஆய்வு செய்ய வருகின்றனர். இதனால், நாக் அமைப்பிடம் இருந்து கூடுதல் புள்ளிகள் பெற தேவையான அனைத்து முயற்சிகளும் கல்லூரி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Coimbatore Government Arts College ,
× RELATED நீண்டகாலமாக சிறு, குறு, நடுத்தர...