×

சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

வால்பாறை, நவ.8: வால்பாறை பகுதியில் வட கிழக்கு பருவமழை மழை குறைந்ததால் சோலையார் அணைக்குநீர்வரத்து குறைந்ததுகுறைந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக நீர் பிடிப்பு பகுதிகளான  வால்பாறை உள்ள சின்னக்கல்லார், அக்காலை புல்மேடு, பெரியகல்லார் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் கனமழை பெய்யும். ஆனால் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால் சிற்றோடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், அணைகளின் நீர்மட்டம் நிலையாக உள்ளது. இந்நிலையில் சின்னக்கல்லார் அணைக்கு 94 கன அடி நீர் மட்டுமே வரத்து உள்ளது. இந்த அணைக்கு வரும் நீர் கீழ்நீரார் அணைக்கு செல்கிறது. இதனால் கீழ் நீரார் அணைக்கு வினாடிக்கு 260.42 கன அடி நீர் வரத்து உள்ளது. பி.ஏ.பி ஒப்பந்தப்படி 157 கன அடி நீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் 111 கன அடி நீர் சோலையார் அணைக்கு செல்கிறது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 332.18 கன அடி நீர் வரத்து உள்ளது. 18.63 கன அடி நீர் சேடல் பகுதியில் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. 160 அடி நீர் மட்டம் உள்ள அணையில் 160.03 அடி நீர் உள்ளது. அணையில் 5386.70 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. சோலையார் அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும், நீர் இருப்பு தொடர்ந்து முழு மட்டத்தில் உள்ளது பி.ஏ.பி பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி வால்பாறையில் 14 மிமீ. மழையும், சின்னகல்லார் 6 மிமீ., நீரார் 10 மிமீ., சோலையார் அணைபகுதியில் 2 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.

Tags : Soiliyar Dam ,
× RELATED தாகம் தணிக்கும் ஹலோ இளநீர்!