×

கோவை அரசு கலைக்கல்லூரி விடைத்தாள் திருத்தும் பணிகள் 11ம் தேதி துவக்கம்

கோவை, நவ. 8: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் வரும் 11ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலையில் படிக்கும் மாணவர்களுக்கான பருவ தேர்வு கடந்த 30ம் தேதி துவங்கியது. ெமாழிப்பாட தேர்வுகள் முடிந்த நிலையில், தற்போது முக்கிய பாடங்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வினை மொத்தம் 5,300 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர்.

இந்த தேர்வுகள் வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் பணியை விரைந்து முடித்து தேர்வு முடிவுகளை வெளியிட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இளங்கலை மாணவர்களின் மொழிப்பாடம் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 11,12 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து முதுகலை மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 21,22 ஆகிய நாட்களில் நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags : Government of Kerala ,Art Gallery ,
× RELATED அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான்...