×

தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது

சென்னை, நவ. 8: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று முன்தினம் வழக்கம்போல் மின்சார ரயில் வந்துள்ளது. அதில் வானுவம்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (43) என்பவர் பரங்கிமலை நிலையத்தில் ஏறி மாம்பலம்  நோக்கி சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதேவி பையில் இருந்த மணிபர்சை அதே ரயிலில் வந்த மற்றொரு பெண் எடுத்துள்ளார். இதை மற்றொரு பெண் பார்த்து ஸ்ரீதேவியிடம் கூறினார். ஆனால் அந்த பர்சை எடுக்க முயற்சித்த பெண், ‘நான் எதையும் எடுக்கவில்லை. எனக்கு எதுவும் தெரியாது’ என கூறியுள்ளார். ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்ததும் அந்த  பெண் அருகில் இருந்தவர்களை தள்ளிவிட்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளார்.

இதை பார்த்த சக பயணிகள் அந்த பெண்ணை விரட்டி பிடித்து மாம்பலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (30) என்பதும், இவர், ஈஞ்சம்பாக்கம்  பகுதியில் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்களில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து   போலீசார் அவரை  கைது செய்து, அவரிடம் இருந்து ₹20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பாலியல் தொல்லையால் டிரைவர் கொலை...