×

தேதி மீலாது நபி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை

திருவள்ளூர், நவ. 8: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (10ம் தேதி) மீலாது நபி அன்று அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விதிகள் 2003ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள், அதை சார்ந்த ‘பார்’’கள் அனைத்தும், நாளைய  மறுதினம் (10ம் தேதி) மீலாது நபி தினத்தன்று கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Holidays ,bartenders ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்