×

4 பேருக்கு குண்டாஸ்

சென்னை, நவ. 8: சென்னை மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஆசாமிகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ெசய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர்.  அந்த வகையில், கொலை வழக்கில் தொடர்புடைய அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்பன்ராஜ் (எ) அப்பன் (35), தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மாங்காடு மங்களபுரத்தை சேர்ந்த  விக்னேஷ் (எ) பல்லு விக்கி (22), செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த புழல் காவாங்கரையை சேர்ந்த பிரேம்குமார் (25) மற்றும் மின்சார ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எண்ணூர் தள்ளாங்குப்பத்தை சேர்ந்த  நாகராஜ் (22) ஆகிய 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பகுதி நேர ஆசிரியர்கள் குமுறல் 4 பேர் டிஸ்சார்ஜ்