×

திருமுல்லைவாயலில் வாலிபரை மிரட்டி 1.25 லட்சம் பறிப்பு

ஆவடி, நவ. 8: திருமுல்லைவாயல் பகுதியில் பைக்கில் சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர், சோமசுந்தரம் அவென்யூவை சேர்ந்தவர் சாமுண்டியன் (34). இவர் வீடு, கடைகளுக்கு உள்அலங்கார வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வேலை முடிந்து அம்பத்தூரில் இருந்து பைக்கில் வீட்டுக்கு கிளம்பினார்.திருமுல்லைவாயல் அரபாத் ஏரி அருகே வந்தபோது 2 திருநங்கைகள் உள்பட 4 பேர் சாமுண்டியனை வழிமடக்கினர்.

பின்னர் அவரை அங்குள்ள மறைவான இடத்துக்கு கூட்டி சென்று மிரட்டி சட்டை பையில் இருந்த ₹1.25 லட்சத்தை  பறித்துவிட்டு விரட்டிவிட்டனர்.இதுகுறித்து சாமுண்டியன் கொடுத்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் எஸ்ஐ சேகர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்த 2 திருநங்கை உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் தொல்லையால் டிரைவர் கொலை...