பணம் திருடிய வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, நவ. 8: கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் உள்ள கடையில் டீ குடித்தவரிடம் ₹500 பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.    கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் பாபு  (25). இவர், நேற்று பாதிரிவேடு பஜார் பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது  அவரது பாக்கெட்டில் இருந்த ₹500 காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராஜா (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது