மாமியாருடன் புது மாப்பிள்ளை உல்லாசம் இளம்பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி, நவ. 8: கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் ரம்யா (20). இவருக்கும், சென்னை ரெட்டேரி பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) என்பவருக்கும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம்  நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை ரம்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அவரது சடலத்தை கைப்பற்றி பொன்னேரி  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரம்யாவின் தாய் கௌசல்யா (37) தனது மகளின் கணவரும், மருமகனுமான நாகராஜுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.  இதை நேரில் கண்ட ரம்யா அதிர்ச்சி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.   இதுகுறித்து ரம்யாவின் அண்ணன் விக்னேஷ் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரி்க்கின்றனர்.


Tags : mother-in-law ,
× RELATED சென்னை அயனாவரத்தில் சொத்துத் தகராறில் மாமியாரை கடத்திய மருமகள் கைது