×

திருத்தணி நீதிமன்றத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

திருத்தணி, நவ. 8: திருத்தணி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது.திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதி செல்வநாதன் உத்தரவின்பேரில் மர்ம காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர்  வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சார்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி உமா  நிலவேம்பு குடிநீரை வழங்கி துவக்கி வைத்தார். இதனையடுத்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் என, 300 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  பின், நீதிமன்றத்தில் புதியதாக அமைக்கப்பட்ட தொடுதிரை இயந்திரம்  மூலம் வழக்குகளை விவரம் தெரிந்துக் கொள்ளும் இயந்திரத்தை நீதிபதி உமா திறந்து வைத்தார். இதில், மூத்த வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, கிஷோர் ரெட்டி, முத்துவேல், வேலாயுதம் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை, சார்பு நீதிமன்ற தலைமை எழுத்தர் இராமமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

Tags : Court of Correction ,
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்