×

திருத்தணியில் இன்று விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு முகாம்

திருத்தணி, நவ. 8: திருத்தணியில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடக்கவுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருத்தணி கோட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்  நடைபெற உள்ளது. எனவே, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது குறைகளை எழுத்து மூலமாக, மனுவாக கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். இவ்வாறு கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.


Tags : Farmers' Grievance Camp ,
× RELATED பாலியல் தொல்லையால் டிரைவர் கொலை...