×

பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை ரெய்டு

திருப்போரூர், நவ.8: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் மாங்கிலால் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாவலூர், மாம்பாக்கம், கல்பாக்கம் ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. நேற்று காலை முதல் இந்த துணிக்கடை மற்றும் டிபார்ட்மெண்ட் கடையில் ஷட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடை உரிமையாளர் ஊருக்கு போயிருக்கலாம். அதனால் கடை பூட்டப்பட்டுள்ளதாக பலரும் கருதினர்.இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஷட்டரைத் திறந்து ஏராளமான அதிகாரிகள் வெளியே வந்தனர். அப்போதுதான் காலை முதலே அந்த துணிக்கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வருமான வரித்துறையினர் ரெய்டு  நடத்தியது தெரிந்தது. இதில் கணக்கில் வராத சொத்துக்கள், ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.ஒரே நேரத்தில் நாவலூர், மாம்பாக்கம், கேளம்பாக்கம், கல்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.


Tags : Income Tax Department Raid ,Popular Shop ,
× RELATED ஜிஎஸ்டி மோசடி,..ஈரோட்டை சேர்ந்த...