×

10ம் வகுப்பு படித்துவிட்டு 6 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

காஞ்சிபுரம், நவ.8: பெரிய காஞ்சிபுரம் காலாண்டார் தெருவை சேர்ந்தவர் திருமலை (40). கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இப்பகுதி மக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இவரிடம்  சிகிச்சை பெற்றுள்ளனர்.திருமலை, முறைாக மருத்துவம் படிக்கவில்லை என மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, மருத்துவ கண்காணிப்பாளர் கல்பனா, நகராட்சி நகர் நல அலுவலர் முத்து ஆகியோர் நேற்று திருமலை நடத்தி வந்த கிளினிக்கில் திடீர் சோதனை செய்தனர். அப்போது திருமலை 10ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு,  பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிந்தது.மேலும் டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு  நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் மருந்து, ஊசி போடுவது தெரியவந்தது. இதையடுத்து பிடித்து, சிவகாஞ்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்  வழக்குப்பதிவு செய்து, போலி டாக்டர் திருமலையை கைது செய்தனர்.கடந்த ஆண்டு பெரிய காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவில் போலி மருத்துவர் என போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் மீண்டும் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : doctor ,
× RELATED கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்