×

சங்கரா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பயிலரங்கம்

காஞ்சிபுரம், நவ.8: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகதில், வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதித் தனிமங்களின் ஆவர்த்த அட்டவணை ஆண்டு 2019ஐ முன்னிட்டு, வேதித்தனிமங்களின் ஆவர்த்த  அட்டவணை என்ற தலைப்பில் 2 நாள் தேசிய பயிலரங்கம் நேற்று தொடங்கியது.மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடந்த பயிலரங்கிற்கு  பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் ஜி.சீனிவாசு, டீன் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.பயிலரங்க  ஒருங்கிணைப்பாளர் சந்தானம், பயிலரங்கத்தின் நோக்கத்தினை விவரித்துப் பேசினார். காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி கழக முதல்நிலை விஞ்ஞானி வாசுதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த பயிலரங்கத்தில்  தனிமங்களின் ஆவர்த்த அட்டவணை தரும் செய்திகள், இன்றைய நிலையில் அதன் பயன்பாடு, எதிர்கால பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.


Tags : National Level Workshop ,Sankara University ,
× RELATED மாநில விளையாட்டுப் போட்டி: காஞ்சி சங்கரா பல்கலை. முதலிடம்