×

சாலவாக்கத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

உத்திரமேரூர், நவ.8: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் தனியார் அமைப்பு சார்பில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அமைப்பின் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் தாஜிதின் அகமது,  ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுர்வேத மருத்துவர் தாமரை மணவாளன் கலந்து கொண்டு ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இதில் மூட்டுவலி, எலும்பு தேய்மானம், முதுகு தண்டுவட நோய் உள்படபல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Ayurvedic Medical Camp ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...