×

காஞ்சிபுரம் திருக்காலிமேடு குளங்கள் சீரமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை

காஞ்சிபுரம், நவ.8: காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள குளங்களை சீரமைக்க கோரி, காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி அங்காளபரமேஸ்வரி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் மாணவி  கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் பழங்காலத்தில் குடிநீருக்காகவும், இதர பயன்பாட்டுக்காகவும் சின்ன வேப்பங்குளம் மற்றும் பெரிய வேப்பங்குளம் ஆகிய 2 குளங்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த குளங்கள் தற்போது கோரை புற்கள், புதர் மண்டி  சீரழிந்துள்ளது.
இதனால் கோடை காலங்களில் திருக்காலிமேடு பகுதி மக்கள், தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறார்கள் என்பதை மேற்கொண்ட என்சிஎஸ்சி ஆய்வில் அறிந்து கொண்டேன்.எனவே, சின்ன வேப்பங்குளம் மற்றும் பெரிய வேப்பங்குளம் ஆகிய குளங்களை சீரமைத்து கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், மனுவுடன் சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைகளையும் முதலமைச்சர் தனிப்பிரிபுக்கு மாணவி அங்காளபரமேஸ்வரி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Minister ,reorganization ,Kanchipuram ,
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை