ஏலச் சீட்டு நடத்தி ₹60 லட்சம் மோசடி எஸ்ஐ, மனைவியுடன் கைது

சென்னை, நவ. 8: மடிப்பாக்கத்தில் சீட்டு நடத்தி ₹60 லட்சம் மோசடி செய்த எஸ்ஐ மற்றும் அவரது மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (53). தரமணி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக உள்ளார். இவரது மனைவி ஜோசபின் ராணி. இவர், மடிப்பாக்கம் பகுதி மக்களிடம் ₹1 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி  வந்துள்ளார். ஆனால், சீட்டு கட்டியவர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்காமல், அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், ஏலச்சீட்டு நடத்தி பணத்தை மக்களிடம் கொடுக்காமல் ஏமாற்றியது தெரிந்தது.இதையடுத்து போலீசார், இரவு பணி முடிந்து நேற்று காலை வீடு திரும்பியபோது, எஸ்ஐ ஜான்பீட்டர், அவரது மனைவி ஜோசபின் ராணியை கைது செய்தனர்.


Tags : SI ,
× RELATED டிரான்ஸ்பரை கண்டித்து நூதன போராட்டம் 65 கி.மீ தூரம் ஓடிய போலீஸ் எஸ்.ஐ.