திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

திருக்கழுக்குன்றம், நவ. 8: திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டம் பாலாறு உபவடிப் பகுதி திட்டத்தின் கீழ், மாவட்ட   அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வேளாண் உதவி இயக்குநர் கணேசன் தலைமை  தாங்கினார். காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் அசோகன், காஞ்சிபுரம் வேளாண் (மாநில திட்டம்) துணை  இயக்குநர் லதா பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை வேளாண் அலுவலர் ஹாஜகான், காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குநர் சிவக்குமார் சிங், மாற்றத்திற்கான சிறப்பு தகுதி மைய தலைவர் நாகராஜன், வேளாண் வல்லுநர் சாந்தலிங்கம் ஆகியோர் கலந்து  கொண்டனர். காட்டுப்பாக்கம் உழவியல் உதவி பேராசிரியர் செல்வராஜ் வேளாண்மை காண தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார்.இதில், திருக்கழுக்குன்றம், படப்பை, சிறு காவேரிப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், காட்டாங்கொளத்தூர், பவுஞ்சூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில், திருக்கழுக்குன்றம் வேளாண் அலுவலர் அருள்பிரகாசம் நன்றி கூறினார்.


Tags : Farmers Training Camp ,
× RELATED திருக்கழுக்குன்றம், கல்பாக்கம்...