×

மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

திருக்கழுக்குன்றம், நவ.8: திருப்போரூர் அடுத்த கண்டிகை பகுதியில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து, சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல்  கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அப்போது, அங்கு மதுபானம் மற்றும் சாராய பாக்கெட்டுகள் விற்று கொண்டிருந்த நல்லம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (45), திருவேற்காட்டை  சேர்ந்த சந்தானம் (32) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் 2 மாதத்துக்கு பின்...