பெண்ணிடம் சில்மிஷம் வாலிபருக்கு சிறை

துரைப்பாக்கம்: கானத்தூரை சேர்ந்தவர் ஆதி ஸ்டீபன் (23), தனியார் கம்பெனி  ஊழியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் காயத்ரி (35), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரை இழந்தவர். நேற்று முன்தினம் இரவு காயத்ரி வீட்டில் தனியாக  இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த ஆதி ஸ்டீபன் காயத்ரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதி ஸ்டீபனை கைது செய்தனர்.  சூளைமேடு நமச்சிவாய புரத்தை சேர்ந்த சிறுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபு (எ) ஊத்த பிரபு (19) என்பவர், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் உறவினர்கள், பாபுவை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக சூளைமேடு போலீசார் பிரபுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: