×

டெங்கு புழு உற்பத்தி கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் ₹58 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

நாகர்கோவில், நவ. 7:   நாகர்கோவில் மாநகராட்சிபகுதியில் கடந்த 2 மாதகாலம் நடந்த சோதனையில் வணிக நிறுவனங்களில் டெங்கு கொசுபுழு உற்பத்தி இருப்பதை கண்டுபிடித்து இது வரை ரூ.58 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.
 குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து ெகாண்டு இருக்கிறது. மழைகாலங்களில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் பலர் இறந்துள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  மேலும் டெங்கு பாதிக்காமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியிலும் டெங்கு கொசுபுழு உற்பத்தியை தடுக்கும் வகையில் மாநகராட்சி களப்பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்து டெங்கு கொசுபுழு உற்பத்தி இருந்தால், அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக தீவிர நடவடிக்கையில் பிரபல நகை கடை உள்பட பல வணிக நிறுவனங்களுக்கு a33 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 நேற்று முன்தினம் மேலஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த குடோனில் சோதனை செய்தபோது டெங்கு கொசுபுழு உற்பத்தி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் a25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது வரை மொத்தம் a58 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: மாநகர பகுதியில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் போதிய விழிப்புணர்வு காரணமாக வீடுகளில் கொசு புழு உற்பத்தி முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் மக்கள் அடிக்கடி செல்லாத வீட்டை சுற்றியுள்ள காலிமனைகள், வீட்டின் மொட்டை மாடிகளில் ேதங்கும் தண்ணீரில் கொசுபுழு உற்பத்தி இருக்கும்.  இதனை கண்டுபிடித்து அழிக்க கொசுபுழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் அறிவுரையின் பேரில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாத காலமாக இந்த பணி நடந்து வருகிறது. இதுவரை சோதனையில் வணிக நிறுவனங்களில் கொசுபுழு உற்பத்தி இருப்பதை கண்டுபிடித்து ரூ.58 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து நடக்கும். பொதுமக்கள் வீட்டை சுற்றியும், மொட்டை மாடி, வீட்டிற்குள்ளும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால், டெங்குபாதிப்பை முற்றியும் கட்டுப்படுத்தலாம் என்றார்.


Tags : Nagercoil ,
× RELATED சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி