×

போலீஸ் குவிப்பால் பரபரப்பு போலீஸ் பணிக்கான உடல் தகுதித்தேர்வில் 760 பேர் பங்கேற்பு

விருதுநகர், நவ.7: விருதுநகரில் சீருடை பணியாளர் முதல் நாள் தேர்வில் 760 பேர் பங்கேற்றனர். 40 பேர் ஆப்சென்ட் ஆகினர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 8,826 காலியிடங்களுக்கு கடந்த ஆக.25ல் எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற எழுத்து தேர்வில் 10,618 ஆண்கள், 1,658 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 12,277 பேர் தேர்வெழுதினர். தேர்வு எழுதியவர்களில் 644 பெண்கள் உட்பட 2,229 பேர் தேர்ச்சி பெற்றனர்.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது. நேற்று முதல் உடல் தகுதி தேர்விற்கு அழைக்கப்பட்ட 800 ஆண்களில் 760 கலந்து கொண்டனர். இவர்களுக்கு மார்பு, உயரம், 1,500 மீ ஓட்டம் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. உடல் தகுதி தேர்வு பணி கண்காணிப்பாளர்களாக காவல் பயிற்சி பள்ளி டிஐஜி சத்திய பிரியா, சிறைத்துறை டிஐஜி பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய உடல் தகுதி தேர்வுகளை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் பார்வையிட்டார். மாவட்ட எஸ்பி பெருமாள், முன்னாள் எஸ்பி ராஜராஜன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது