×

சுகாதாரக்கேடு அபாயம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு மணல் திருடர்களை பிடிப்பதற்காக மாற்று வாகனத்தில் வந்த சப்.கலெக்டர்

திருவில்லிபுத்தூர், நவ.7: திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலையும் அனுமதியின்றி மண் மற்றும் மணல் அள்ளி வந்த 6 டிராக்டர்களை திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த்துறையினர் சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.இந்த பரபரப்பு முடியும் முன்னர் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் மணல் திருட்டை கண்டுபிடிப்பதற்காக அவருடைய வாகனத்தில் வராமல் மாற்று வாகனத்தில் சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூருக்கு வந்தார். பின்னர் அவரே நேரடியாக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் திருவண்ணாமலை பகுதிக்கு சென்றார். அப்போது அந்த பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த 2 டிராக்டரை பிடித்தார். அந்த டிராக்டர்களை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு டிராக்டர்களும் நகர் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. போலீசார் இரண்டு டிராக்டர்களும் யாருக்குச் சொந்தமானவை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sub-Collector ,Sathur Ramachandran MLA ,
× RELATED தமிழக போலீசுக்கு உபகரணங்கள்...