×

பெரியகுளம் நாமத்வாரில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

பெரியகுளம், நவ. 7: குளோபப் ஆர்கனைசேசன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட சார்பில் மஹாரண்யம்  முரளிதர ஸ்வாமியின் பரிபூரண ஆசியுடன் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கோபாஷ்டமியை முன்னிட்டு கோவிந்த பட்டாபிசேகம் நடைபெற்றது.  மாதுரி ஸகி சமேத  பிரேமிக வரதன் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பாகவதத்திலிருந்து கோவிந்த பட்டாபிசேக கட்டம் பாராயணம், மதுரகீத பஜனை, நடைபெற்றது. மூலவர் பிரேமிக வரதஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலி பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலக நன்மை வேண்டி கோவிந்தா, கோவிந்தா என்று கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் சொற்பொழிவில் இறைவனுடைய நாமத்தை ஜபம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் இறைவன் நிச்சயமாக நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.
இறைவனுடைய நாமத்தை கூறி எல்லாவித நன்மைகளும் பெறலாம் என்று உரையாற்றினார். உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும், மாணவ, மாணவியர் கல்வி நலன் வேண்டியும், எல்லோருக்கும் எல்லாவித நன்மைகள் வேண்டியும், ஹரேராம மஹாமந்திர கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Periyakulam Namathwar ,
× RELATED பெரியகுளம் நாமத்வாரில் ரதசப்தமி சிறப்பு கூட்டு பிரார்த்தனை