×

கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் பொது அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்

தேனி, நவ. 7: தேனி மாவட்டத்தின் பொது அமைதியை பாதுகாப்பேன். மக்களிடையே எக்காரணம் கொண்டும் பிரச்னைகள் உருவாகாமல் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்’ என நேற்று தேனி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்ற சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தார்.தேனி மாவட்டத்தின் எஸ்.பி.யாக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்த பாஸ்கரன் சென்னை பூந்தமல்லி ஆயுதப்படை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டார். சென்னை புளியந்தோப்பு கூடுதல் கமிஷனராக பணிபுரிந்த சாய்சரண் தேஜஸ்வி நேற்று தேனி எஸ்.பி.யாக பொறுப்பேற்றார்.அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தின் பொது ஒழுங்கு, பொது அமைதியை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே முக்கிய பணியாக இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே மக்களிடையே பிரச்னைகள் உருவாகாத வகையில் பாதுகாப்பேன். பிரச்னையோடு ஸ்டேஷனுக்கு வரும் ஒரு நபருக்கு போலீசார் நியாயமான முறையில் உதவுவதன் மூலம், அந்த பிரச்னை பெரிதாகாமல் தடுத்து விடலாம். இந்த பணி ஒரு மிகச்சிறந்த பொதுநல நோக்கத்துடன் போலீசார் மூலம் நடைபெறும். போலீசார், பொதுமக்கள் இடையே நல்ல உறவு ஏற்படும் வகையில் செயல்பாடுகள் முழு வடிவம் பெறும். தற்போதய நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைந்துள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி விபத்துக்கள் ஏற்படாமல்் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் கலந்து பேசி சாலை பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : district ,Coma Disease Free Vaccination Camp ,
× RELATED நிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள...