×

கம்பம் பகுதியில் கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம்

கம்பம், நவ. 7: கம்பம் பகுதியில் கோமாரி நோய்க்கு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் வட்ட அளவில் நடைபெறும் இம்முகாமில் தேனி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மருத்துவர் அறிவழகன் குறுக்காய்வு செய்தார். உதவி இயக்குனர் மருத்துவர் அன்பழகன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். மாடுகளைத் தாக்கும் கோமாரி நோய் களுக்கு இலவசமாக தடுப்பூசி முகாம் கம்பம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 17வது சுற்றாக வாய் காணை மற்றும் கால் காணை நோய்க்கு தடுப்பூசி போடப்படுகிறது.கறவை மாடு, எருதுகள் நாலு மாதங்களான இளம் கன்றுகள், நச்சுயிரியால் ஏற்படக்கூடிய கோமாரி நோய் வராமல் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் முகாம் கடந்த மாதம் அக்டோபர் 21ம் தேதி முதல் இந்த மாதம் 12ம் தேதி வரை 23 நாட்களுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 3 மணியிலிருந்து ஆறு மணிவரை இலவசமாக நடைபெறுகிறது.அந்தந்த பகுதிகளிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. கர்ப்பமாக இருக்கக்கூடிய பசுவிற்கு 8 மாதம் வரை தடுப்பூசி போடப்படுகிறது. விவசாயிகள் மற்றும் கால்நடைகளை பராமரிப்பவர்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். .இதுகுறித்து கால்நடை மருத்துவர் காமேஷ் கண்ணன் கூறுகையில், ‘கடந்த மாதம் 21ம் தேதியிலிருந்து இந்த மாதம் 12ம் தேதி வரை இம்முகாம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு வீடாகச் சென்று காணை நோய் தாக்கிய மாடுகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாய் காணை மற்றும் கால் காணையால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு இலவசமாக ஊசி போட்டு வருகிறோம். வேலை நேரத்தில் மருத்துவமனையிலும் மீதி நேரத்தில் ஒவ்வொரு வீடாக சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. பசு கர்ப்பமாக இருந்தால் 8 மாதம் வரை இந்த ஊசி போடலாம். இதனால் எந்தவிதமான பாதிப்பும் பசுவுக்கு ஏற்படாது. அதனால் தவறாமல் அனைத்து விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் இந்த முகாமினை பயன்படுத்தி இலவசமாக கோமாரி நோய் தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளலாம். விடுபட்டவர்கள் கால்நடை மருத்துவமனையில் 12ம் தேதி வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடலாம்’ என்றார்.

Tags : vaccination camp ,area ,Kumbh ,
× RELATED ஆடுகளுக்கான நோய்த் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்