17 வயது சிறுமி தற்கொலை

தேனி, நவ. 7: ஆண்டிபட்டி அருகே சித்தயக்கவுண்டன்பட்டியில் மனநலம் பாதித்த மூதாட்டியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.ஆண்டிபட்டி அருகே சித்தயக்கவுண்டன்பட்டியில் குடியிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட வீருசின்னம்மாள் (75) என்ற மூதாட்டியை வீட்டில் தங்கி பராமரிக்கும் பணியில் மதுரை பங்கம்பட்டி காலனியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் பிரதீபா (17), எழுமலை அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகள் சுவேதா (17) ஆகியோர் மாத சம்பளத்திற்கு பணிபுரிந்தனர். இவ்விரு இளம்பெண்களும் இதே கிராமத்தில் கணேசன் என்பவரது வீட்டில் தங்கியிருந்தனர்.நேற்று முன்தினம் இவ்விரு இளம்பெண்களும் ஆண்டிபட்டி சென்று விட்டு மதியம் வீருசின்னம்மாள் வீட்டிற்கு வந்தனர். அப்போது பிரதீபாவிற்கு செல்போன் அழைப்பு வந்தது. அவர் அங்கிருந்து தான் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் பிரதீபா திரும்பி வராததால் சுவேதா வீட்டிற்கு சென்றபோது வீட்டின்கதவு பூடடியிருந்தது. உள்ளே பார்த்தபோது வீட்டிற்குள் பிரதீபா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து சுவேதா அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் இறந்துபோன பிரதீபாவின் பிரேத உடலை கைப்பற்றி தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் சேதமடைந்த மலைப்பாதை பாரதிதாசன் பல்கலை.

Tags : suicide ,
× RELATED வாசலில் தலை சீவியதால் பிரச்னை தேனியில் இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை