×

கடல் போல் காட்சி வாங்கிய ஒரு வாரத்தில் புது பைக் திருட்டு

காரைக்குடி, நவ.7: காரைக்குடியில் வாங்கிய ஒரு வாரத்தில் புது பைக் திருடப்பட்டுள்ளது. காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் செந்தில்நாதன் (26). புதுவயலில் பெட்ரோல் பங்கில் பணி புரிந்து வருகிறார். இவர் புதிதாக கடந்த வாரம் பைக் வாங்கினார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் காம்பவுண்ட் உள்ளே பைக்கை நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது புதிய பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்கவில்லை. குறித்து செந்தில்நாதன் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags : sea ,
× RELATED மீனவர்கள் 4 வது நாளாக கடலுக்கு...