×

திருப்புத்தூர் அருகே தகாத வார்த்தையால் பேசியவரை காரில் கடத்தி தாக்குதல்

திருப்புத்தூர், நவ. 7: திருப்புத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியவரை காரில் கடத்தி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்புத்தூர் அருகே மேலமாகாணத்தை சேர்ந்தவர் நாச்சியப்பன்(44). இவர் இவர்களது சமூதாய தலைவராக பொறுப்பில் இருந்துள்ளதாகவும், அந்த பொறுப்பு முடிந்தும், அதற்கான கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்து பின்னர் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களது புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாட்ஸ் ஆப்பில் தகாத வார்த்தையால் பேசியதாக அகிலன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் ஏற்கனவே நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் முன்விரோதம் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நாச்சியப்பன் கடைவீதிக்கு சென்ற போது, 9 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நாச்சியப்பன் அவர்களிடம் இருந்து தப்பித்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாச்சியப்பன் கொடுத்த புகாரின் பேரில், நாச்சியாபுரம் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, மேலமாகாணத்தை சேர்ந்த கருப்பையா (44), சண்முகம் (54), நாகராஜன் (40) ஆகிய 3 பேரையும் நேற்று எஸ்.ஐ., ஈஸ்வரன் கைது செய்து விசாரித்து வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Thiruputhur ,
× RELATED நீதிபதியிடம் சிக்கிய...