×

சிங்கம்புணரி அருகே அதிமுக பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

சிங்கம்புணரி, நவ. 7: சிங்கம்புணரி அருகே அதிமுக பிரமுகர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம் சுள்ளாம்பட்டியை சேர்ந்தவர் குமார் (40). அதிமுக பிரமுகரான இவர் கடந்த நவ.1ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு புதூரில் இருந்து சுள்ளாம்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் மர்மநபர்கள் குமாரை மறித்து கட்டை மற்றும் கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து குமார் மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் உலகம்பட்டி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ், அழகர்சாமி, மகேஸ்வரன் ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாஸ்மாக் கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் 3 பேரும் சேர்ந்து குமாரை அடித்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : persons ,murder ,AIADMK ,Singampunari ,
× RELATED விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக்...