×

திருப்புத்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருப்புத்தூர், நவ.7: திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித்தார். ஆசிரியர் சதக்கதுல்லா வரவேற்றார். முகாமில் திருப்புத்தூர் நகர் காவல் நிலைய எஸ்.ஐ. முத்துக்கிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசுகையில், மாணவ, மாணவிகள் எந்த ஒரு தீயப்பழக்கத்திற்கும் அடிமையாகி விடக்கூடாது. அதை பயன்படுத்துவோரின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். பள்ளி மற்றும், கல்லூரி பருவங்களில் இளம் வயதினர் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகள் தங்களது குடும்பங்களையும், எதிர்காலத்தையும் சீரழித்து விடும். மேலும் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து விடுபடும் முறைகள் பற்றியும் பேசினார். போக்குவரத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் பேசுகையில், டூவிலர்கள் ஓட்டும் இளைஞர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். தலை கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகமான வேகத்தில் செல்ல கூடாது உள்ளிட்ட சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்புகள் குறித்தும் விளக்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Drug Prevention Awareness Camp ,Tiruppur ,
× RELATED தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு நாளை திருப்பூர் வருகை