×

காயல்பட்டினம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆறுமுகநேரி, நவ.7: காயல்பட்டினம் அருகேயுள்ள கொம்புத்துறையைச் சேர்ந்தவர் மரியஅந்தோணி மகன் ஸ்டீபன்சுரேஷ்(36), கடல் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனஉளச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கினார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்டீபன்சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் மரியசெல்வி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்ரகாளி என்ற பவுன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Worker suicide ,Kayalpattinam ,
× RELATED ஊரடங்கு நீட்டிப்பால் தொழிலாளி தற்கொலை