தூத்துக்குடி 19வது வார்டு பூபாலராயர்புரத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

தூத்துக்குடி, நவ. 7: தூத்துக்குடி மாநகராட்சி 19வது வார்டு பூபாலராயர்புரம் பகுதியில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பூபாலராயர்புரம் ரோசம்மாள் ஆசிரியர் பயிற்சி பள்ளி பின்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் உறை இறக்கப்பட்டு சேமிக்கப்படும் கழிவுநீரை எடுக்க மாநகராட்சி வாகனங்களும் முறையாக வருவதில்லை.
Advertising
Advertising

குறிப்பாக மழை நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவு நீரும், மழை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகின்றன. இவை கொசுக்களின் உற்பத்தி கேந்திரங்களாக மாறி மக்களை அச்சுறுத்துகின்றன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு வீட்டுத்தீர்வை, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்தப்படும் இப்பகுதியை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்ைக மேற்கொண்டு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: