×

குளத்தூர் அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம்

குளத்தூர், நவ.7: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.
குளத்தூரை அடுத்த விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜசேகர்(33). இவர் வேப்பலோடைக்கு வேலை விசயமாக
சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஓரிசா மாநிலத்தை சேர்ந்த சேத்ரி மகன் ராஜுபகதூர்(24) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக ராஜசேகர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த தருவைகுளம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bike accident ,Klathoor ,
× RELATED சென்னையிலிருந்து மதுரை செல்ல...