×

9ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, நவ.7: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சி ரோட்டரி சங்கம் இணைந்து வரும் 9ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.திருச்சி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 10 மணி்க்கு துவங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது அசல், நகல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும். 18 வயது நிரம்பிய 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். பதிவு கட்டணம் கிடையாது என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.Tags : Private Sector Employment Camp ,
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி